Kogilavani / 2016 ஜூன் 21 , மு.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்
மத்திய மாகாண சுகாதார அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படும் பிரதான வைத்தியசாலைகள் சிலவற்றை அபிவிருத்தி செய்வதற்காக, 150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம்
காங்கிரஸின் தலைவரும் நீர் வழங்கல் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில், சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிமின்; பங்களிப்புடன் நேற்;று திங்கட்கிழமை (20), மத்திய மாகாண சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின்; போது இந்தத் தகவல் வெளியிடப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், கட்டுகஸ்தோட்டை, அக்குறணை, தெல்தெனிய மற்றும் தெல்தோட்டை ஆகிய வைத்தியசாலைகளும் தம்புளை மற்றும் ரிகில்லகஸ்கட ஆதார வைத்தியசாலைகளுமே இவ்வாறு அபிவிருத்தி செய்யப்படவுள்ளன என்று அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.
இந்த வைத்தியசாலைகளுக்கு புதிய கட்டட வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகள், மருத்துவ உபகரணங்களைப் பெற்றுக்கொடுத்தல், தாதிமார் நியமனம் போன்ற அபிவிருத்திகளுக்கு முன்னுரிமை வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில், பிரதியமைச்சர் பைஸல் காசிம், மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் சாந்தி சமரசிங்க மற்றும் சம்பந்தப்பட்ட வைத்தியசாலைகளது வைத்திய அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
10 minute ago
45 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
45 minute ago
56 minute ago
1 hours ago