R.Maheshwary / 2023 ஜனவரி 29 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதியின் திம்புளபத்தனை பகுதியில் பாரிய கிளையொன்று முறிந்து விழுந்ததால் குறித்த வீதியுடனான போக்குவரத்து 6 மணித்தியாலங்கள் முற்றாக தடைப்பட்டிருந்து.
நேற்று முன்தினம் (27) மாலை இச்சம்பவம் இடம்பெற்றதுடன், இதன்போது திம்புளபத்தனை பொலிஸார் குறித்த வீதியுடனான போக்குவரத்தை முற்றாக தடைசெய்து, தோட்ட மக்களின் உதவியுடன் மரக்கிளையை அகற்றி போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வந்தனர்.
இதேவேளை கடந்த வருடம் குறித்த வீதியில் பயணித்துக்கொண்டிருந்த ஓட்டோவொன்றின் மீது மரமொன்று முறிந்து விழுந்தமையால் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
21 Mar 2026