2026 மார்ச் 11, புதன்கிழமை

மரத்தன் மாணவன் விழுந்து பலி

Janu   / 2026 மார்ச் 11 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தல துட்டுகெமுனு தேசிய பாடசாலையின் இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டியின் மரத்தன் ஓட்டத்திற்காக ஏனைய மாணவர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மாணவர் ஒருவர், ஓடிக்கொண்டிருந்த போதே கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக புத்தல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் புதன்கிழமை (11) காலை இடம்பெற்றுள்ளது. புத்தல - படல்கும்புரை வீதி, வெஹெர கொட போகஹஎல்ல பகுதியைச் சேர்ந்த, புத்தல துட்டுகெமுனு தேசிய பாடசாலையில் 12ஆம் வகுப்பில் கல்வி பயிலும் டி.எம். மலீஷ சந்தகெலும் (15 வயது) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவர் ஏனைய மாணவர்களுடன் புத்தல - படல்கும்புரை வீதியில் கடுகஹகொலனிய குளம் அருகே ஓடிக்கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.

உடனடியாக புத்தல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

 இச்சம்பவம் தொடர்பில் புத்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .