2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

மரத்திலிருந்து வழுக்கி விழுந்து மாணவன் பலி

Freelancer   / 2022 ஜூன் 04 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

பொகவந்தலாவ - மாவெலி வனப்பகுதிக்கு தனது தந்தையுடன் வியாழக்கிழமை மாலை வேளையில் விறகு சேகரிக்கச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவன், மரத்திலிருந்து வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் மரத்திலிருந்து தவறி விழுந்த நிலையில், பொகவந்தலாவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது இடைவழியில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சம்பவத்தில், பொகவந்தலாவ சென்.விஜயன்ஸ் தோட்டத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சுரேந்திரகுமார் அபிஷாந்த் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.

சிறுவனின் சடலம் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையிலிருந்து, டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X