2025 டிசெம்பர் 29, திங்கட்கிழமை

மரம் முறிந்து விழுந்ததில் காயமடைந்தவர் மரணம்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 07 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெய்யன்

மரமொன்று முறிந்து வீழ்ந்த சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் மற்றுமொரு தோட்டத் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நெல்லிமலை பிரதேசத்தில்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரு பிள்ளைகளின் தாயாரான  36 வயதான ஸ்ரீ.புவனேஸ்வரி  என்பவரே இவ்வாறு பரிதாபமாக மரணமானார்.

கண்டி மடுல்கலை நெல்லிமலை அரச பெருந்தோட்ட யாக்கத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளியான சண்முகம் விஜயலட்சுமி கடந்த   ஜூலை  4 ஆம் திகதி புதன் கிழமை தேயிலை மலையில் வேலை செய்து  சக தொழிலாளர்களுடன்  தேநீர் பருகும் இடத்தில் தேநீர் பருகிக் கொண்டிருந்தபோது மரம்  வீழ்ந்ததில் ஸ்தலத்திலேயே மயங்கி மரணமானாள்.

 இச்சம்பவத்தில் மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர். அவர்களில் ஸ்ரீ.புவனேஸ்வரி  என்னும் தொழிலாளி  கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை (07)  வைத்தியசாலையில் மரணமானார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X