2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

மரை வேட்டையாடியோருக்கு வலைவீச்சு

Sudharshini   / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

பொகவந்தலாவ – பெற்ரோசோ தோட்டத்தில் மரையை வேட்டையாடிய சந்தேக நபர்களை, கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் இன்று (08) தெரிவித்தனர்.

ஸ்ரீபாத வனப்பகுதியிலிருந்து பெற்ரோசோ தோட்டப் பகுதிக்கு இரைத்தேடி வந்த மரையொன்று வேட்டையாடப்பட்டுள்ளதுடன் அதனை இறைச்சியாக்க முயன்றுள்ளனர்.

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு பொலிஸார் வருகை தந்துள்ளனர்.  மரையை வேட்டையாடிய நபர்கள், பொலிஸார் வருவதை கண்டு, மரையை அவ்விடத்திலே விட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

பொலிஸார் மரையை மீட்டு வனப்பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதோடு, சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

வேட்டையாடப்பட்ட மரை, சுமார் 300 கிலோ கிராம் எடையுடையது என பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .