R.Maheshwary / 2022 மே 30 , மு.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஜித்லால் சாந்தஉதய
இரும்பு தாங்கி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3264 லீற்றர் டீசல் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட அரிசி ஆலை ஒன்றின் உரிமையாளர் 5இலட்ச ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
எம்பிலிப்பிட்டிய- கந்துகுருகல்லார பிரதேசத்தில் உள்ள அரிசி ஆலையில் டீசல் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலுக்கமைய, எம்பிலிபிட்டிய பொலிஸார் சந்தேகநபரை கைதுசெய்தனர்.
இதற்கமைய 16 அடி நீளம், 5.4 அடி அகலம், 4.1 அடி உயரமான இரும்பு தாங்கி ஒன்றில் டீசல் மறைத்து வைத்துள்ளமை கண்டறியப்பட்டு அரிசி ஆலையின் உரிமையாளரும் கைதுசெய்யப்பட்டார்.
இந்த நிலையில், அவ்வாறு மறைத்து வைக்கப்பட்டிருந்த டீசல், அவரது வாகனங்களுக்குப் பயன்படுத்துவதற்கா அல்லது விற்பனை செய்வதற்கா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் டீசல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தாங்கியும் பொலிஸாரால் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago