2025 ஜூலை 14, திங்கட்கிழமை

‘மலையகமெங்கும் ஒத்துழையாமை போராட்டம்’

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஒக்டோபர் 16 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் பிரச்சினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், பிரதமரின் இந்திய சுற்றுப் பயணம் நிறைவுற்று நாடு திரும்பியதும், இந்த பிரச்சினைக்கு பிரதமர் தீர்வைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஸ், பிரதமர் நாடு திரும்பி மலையக மக்களின் பிரச்சினைக்கு  நேரடியாகத் தலையிட்டு, தீர்வைப் பெற்றுத் தரும் வரையில் நாளை (16) தொடக்கம் மலையகமெங்கும் ஒத்துழையாமை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

பெருந்தோட்ட மக்களின் சம்பளம் தொடர்பிலான கூட்டொப்பந்தம் குறித்து மலையக தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் நேற்று (15) இடம்பெற்ற 3ஆம் கட்டப் பேச்சுவார்த்தை இணக்கமின்றி முடிவுள்ளதால் நாளை (17) தொடக்கம் மலையகமெங்கும் பல்வேறு வகைகளில் இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.

நேற்று  (16) ராஜகிரியவில் அமைந்துள்ள கட்சியின் தலை​மையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .