2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

மலையக யுவதிகளுக்கு கைத்தொழில் ஊக்குவிப்புப் பயிற்சி

Gavitha   / 2021 பெப்ரவரி 28 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

மலையக பெருந்தோட்டப் பிரதேசங்களில் கைத்தொழில் ஊடாக தமது வருமானத்தை வீட்டிலிருத்தே ஈட்டிக்கொள்ளும் ஆர்வமுள்ள யுவதிகளுக்கு, கைத்தொழில் ஊக்குவிப்புக்கான, ஒருவார காலப் பயிற்சிகளை, காங்கிரஸ் தொழில் பயிற்சி நிறுவனம் வழங்கியது.

நாட்டில் நிலவும் கொரோனா தொற்று பரவல் காலகட்டத்தில், சுகாதார விதிமுறைகளுக்கு அமைய, சமூக இடைவெளி பேணும் வகையில், பயிற்சியின் நடவடிக்கைகளை, காங்கிரஸ் தொழில் பயிற்சி நிறுவனம், இலங்கை இந்திய சமுதாய பேரவையுடன் இணைந்து ஒழுங்கு செய்திருந்தது.

தொழில் வாய்ப்புக்கள் அற்ற யுவதிகளுக்கு, பின்னல் கை தொழில், பத்திக், எம்ரோடியன் என, கைத்தொழில் ஊடாக, வருமானத்தை அவர்களாகவே ஈட்டிக்கொள்ளும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டது.

இந்தக் கைத்தொழில் பயிற்சியில், நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா, பொகவந்தலாவை, சாமிமலை, வட்டவளை, தலவாக்கலை, கொட்டக்கலை ஆகிய பிரதேசங்களிலிருந்து 130 யுவதிகள் பங்குபற்றி பயிற்சிகளை பெற்றுக்கொண்டனர்.

எளிமையான முறையில் கற்கை நெறிகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதால், பயிற்சி பெற்ற130 யுவதிகளும் பத்திக், பின்னல் வேலைப்பாடுகள், எம்ரோய்டிங் போன்ற தொழிற்பயிற்சிகளின் ஊடாக தங்களது வீடுகளில் இருந்தபடியே சுயதொழில்களை மேற்கொண்டு ஆதாயத்தை அடைய வாய்ப்பு கிட்டியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .