2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

மலையக இந்து ஆலயங்களில் கொள்ளை: பொலிஸாரே காரணம்

Gavitha   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சுஜிதா

மலையகத்திலுள்ள இந்து ஆலயங்களில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் பொலிஸாரின் அசமந்தப்போக்கே இச்சம்பவங்கள் அதிகரிப்பதற்கு காரணமெனவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தலவாக்கலை, லிந்துலைக்கு உட்பட்ட பல பிரதேசங்களிலுள்ள ஆலயங்களே அதிகமாக உடைக்கப்பட்டு விக்கிரங்களுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க ஆபரணங்கள் மற்றும் உண்டியல் பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

தலவாக்கலை, வட்டகொடை தோட்டம் மேற்பிரிவிலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் பூட்டு  உடைக்கப்பட்டு,  விக்கிரகங்களுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க நகைகள் மற்றும் உண்டியல் பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸில் திங்கட்கிழமை (15) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை  கைதுசெய்யப்படவில்லை எனவும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  மட்டுக்கலை தோட்டத்தின்  2ஆம் நம்பர் டிவிசனிலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயமும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு உடைக்கப்பட்டு அம்மன் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த  தங்க நகைகள் மற்றும் உண்டியல் பணம்  என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  இவ்வாலயத்தின் கும்பாபிஷேகம் நடைபெற்று, மண்டலாபிஷேக பூஜை இடம்பெற்ற பின் இக்கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளதாக தெரியவருகிறது.

இதே பகுதியிலுள்ள மற்றுமொரு அம்மன் ஆலயத்திலும் தங்க நகைகள்  கொள்ளையடிக்கப்பட்டதாக தெரியவருகிறது.

எனவே, புனித ஸ்தலங்களான ஆலயங்களை உடைத்து கொள்ளையில் ஈடுபடுபவர்களை பொலிஸார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .