2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

மலையக மாணவனின் புதிய கண்டுபிடிப்பு

Gavitha   / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்

நுவரெலியா, இராகலை சென்- லெனாட்ஸ் தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 10இல் கல்வி பயின்று வரும் மாணவனான எஸ்.தருமசீலன், வளியோட்டமுள்ள தலைகவசம் ஒன்றை தயாரித்துள்ளார்.

முற்றிலும் சூரியகளத்தின் உதவியுடன் செயற்படும் இந்த தலைக்கவசம், முடி உதிர்தல், முடி நரைத்தல் போன்றவற்றில் இருந்து ஏற்படும் பின் விளைவுகளை தடுக்கின்றது.

எஸ்.சின்னசாமி மற்றும் ஆதிலெட்சுமி ஆகியோரின் புதல்வரான இம்மாணவனுக்கு, கொழும்பு ஸ்ரீ ஜயவரத்தனபுர பல்கலைகழகத்தினால் கௌரவிப்பும் சான்றிதலும் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மாணவனிடம் வினவிய போது கூறியதாவது,

'எனது விருப்பம் அப்துல்கலாம் போன்று ஆவது தான். இதுவே எனது நீண்ட நாள் கனவு. சிறு வயது முதல் சிறு சிறு விஞ்ஞான சம்பந்தமான ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதில் ஆர்வமாக இருந்து வருகின்றேன்.

எனது 14ஆவது வயதில் இலகு சமயல் உபகரணம் கண்டுபிடித்து நுவரெலியா மாவட்டத்துக்கான இரண்டாம் இட சான்றிதழைப் பெற்றேன். அடுத்து, எனது 15ஆவது வயதில் சிறிய விமானத்தை வடிவமைத்து அதற்கும் நுவரெலியா மாவட்டத்துக்கான 2ஆம் இடத்துக்கான சான்றிதழைப் பெற்றேன்.

எனது அடுத்த கண்டுபிடிப்பான நவீன பாதுகாப்பு கவசத்தை கண்டுப்பிடித்துள்ளேன். இது சூரிய சக்தியில் இயங்கக்கூடியது. இந்த தலைக்கவசத்தில் இருக்கக்கூடிய சூரிய சக்தி, மின் உற்பத்தியாக்கி மூலம்; பொருத்தப்பட்ட விசிறி சுழலும் போது தலைக்கவசத்துக்குள் வளியோட்டம் ஏற்பட்டு குளிராக இருக்கும். இதனால், முடி விழுவதை தடுக்கக் கூடியதாக இருக்கும். இதற்காக மருந்துகளுக்கு செலவு செய்யும் செலவுகளை சேமிக்கக் கூடியதாகயிருக்கும்.

இனிவரும் காலங்களில் எனது அடுத்த கண்டுபிடிப்புக்களாக மனிதனால் இயங்கக் கூடிய ரொபோ, எரிபொருள் இல்லாமல் இயங்கக்கூடிய மோட்டார் வண்டி ஆகியன உள்ளன.  மேற்கண்ட எனது திறமைகளை இனங்கண்டு எனது பாடசாலை அதிபர் வி.சிவராஜ், சக ஆசிரியர்களான விஞ்ஞான பிரிவு ஆசிரியர் கமலஹாசன்,  ஜேமிலா உமா மற்றும் எனது வகுப்பாசிரியர்  விஜயகலா ஆகியோருக்கு நன்றிகளை தெரிவிக்கின்றேன்.

எனது எதிர்கால பிரயோசனமிக்க கண்டுப்பிடிப்புக்களுக்கு இன்னும் தேவையான அனைத்து உதவிகளையும் கல்விசார்ந்த அமைப்புகளும் பொது அமைப்புக்களும் தனியார் அமைப்புக்களும் உதவி புரியுமாயின் எனக்கு செய்யும் மிப்பெரிய உதவியாக இருகும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .