Sudharshini / 2016 பெப்ரவரி 14 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
'தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் திறமையாக விளையாடி எமது வீரர்கள், இலங்கைக்கு பெருமை சேர்த்தது போன்று, மலையக மாணவர்களும் சர்வதேச ரீதியில் பிரகாசிக்கும் வகையில் அவர்களின் திறமைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்' என மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, 'பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் போது, மாணவர்கள் உடல் ரீதியாக பலம் பெறுவதோடு உள ரீதியிலான பண்புகளையும் வளர்த்துக்கொள்கின்றனர். மாணவர்கள் போட்டிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற மன உறுதியைப் பெற்றுக்கொள்வதோடு தலைமைத்துவப் பண்போடு வெற்றி தோல்விகளை சமமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தையும் வளர்த்துகொள்கின்றனர்.
இலங்கை வீரர்கள் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தமது திறமைகளை எடுத்துக் காட்டி நாட்டுக்குப் புகழ் சேர்த்துள்ளார்கள். அதேபோல், மலையக இளைஞர், யுவதிகளும் மாகாண, தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் தமது திறமைகளைப் பறைசாற்ற வேண்டும். அதற்கு பாடசாலைக் காலத்திலிருந்தே மாணவர்கள் விளையாட்டு உட்பட பல்வேறு திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்' என்றார்.
6 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
9 hours ago