2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

மலையேறிய ஐந்து தேரர்கள் கைது

Sudharshini   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ, ஆ.ரமேஸ்

அநுராதபுரம், சந்தலாங்காவ பிரதேசத்திலிருந்து சிவனொளிபாதமலைக்கு  யாத்திரை சென்ற ஐந்து தேரர்களை, ஹட்டன் பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை (16) இரவு 11 மணியளவில் கைதுசெய்துள்ளனர்.

ஹட்டன், குடாகம பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸார், வான் ஒன்றை நிறுத்தி சோதனைக்குட்படுத்திய போது, அதில் ஐந்து பிக்குகள் காவியுடையின்றி சிவில் உடையில் மது அருந்திய நிலையில் இருந்துள்ளனர். இவர்களில் ஒருவர் கஞ்சா வைத்திருந்தமையும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, ஐவரையும் கைதுசெய்யத பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் கஞ்சா வைத்திருந்த பிக்குவை இன்று (17) ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

ஏனைய நான்கு பிக்குகள் குறித்தும், விகாரையின் நாயக்க தேரருக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் மகாநாயக்க தேரரின் அறிவுறுத்தலுக்கமையவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .