2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

மவுசாகலை வட்டாரத்தில் எதிர்ப்புக்கான முன்னாயத்த கூட்டம்

R.Maheshwary   / 2022 மார்ச் 22 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ. தி. பெருமாள் 

அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் 3ஆம் திகதி தலவாக்கலை நகரில் நடைபெறவுள்ள  பேரணி தொடர்பான முன்னாயத்த கூட்டம் மவுசாகலை வட்டாரத்தில் நேற்றைய (22)  தினம் நடைபெற்றது.

மவுசாகலை வட்டாரத்தில் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இக்கூட்டம் நடைபெற்றது.

அதாவது லெமன்மோறா, ஹப்புகஸ்தென்ன மே/பி, ஹப்புகஸ்தென்ன கீ/பி, லக்கம் பிறைவட், லக்கம் கம்பனி, நைன்ஷா கீ/பி, நைன்ஷா மே/பி, சீட்டன், மவுசாகலை ஆகிய பிரிவுகளை உள்ளடக்கிய தோட்டத் தலைவர்கள் தலைவிகள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கான தெளிவூட்டல் கூட்டமே இதன்போது நடைபெற்றது.

எதிர்ப்பு பேரணியில் பங்கேற்கும் பொதுமக்களை நெறிப்படுத்தும் நோக்கில், தொ.தே.சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கணபதி நகுலேஸ்வரன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X