R.Maheshwary / 2022 மே 01 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரா.யோகேசன்
வட்டவளை -மவுண்ட்ஜீன் தோட்ட இளைஞர், யுவதிகளால் அரசாங்கத்திற்கு எதிராகவும் ஜனாதிபதிக்கும் எதிர்ப்பு தெரிவித்து இன்று (1) ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மவுண்ட்ஜீன் தோட்டத்திலிருந்து ஆரம்பித்த ஆர்பாட்டமானது, ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியுடாக வட்டவளை நகரத்தை நோக்கிச் சென்றது.
இதன்போது “இந்த அரசாங்கம் எமக்கு வேண்டாம்,உகண்டாவில் உள்ள கருப்பு பணம் எங்கே,தோட்ட தொழிலாளர்களை சுரண்டி பிழைத்தது போதும் அடிப்படைசம்பளத்தை அதிகரி, ” போன்ற கோசங்களையை எழுப்பிய வண்ணம் பதாகைகளை ஏந்தியவாறு வட்டவளை நகர் வரை சென்றனர்.
பின்னர் வட்டவளை பஸ் தரிப்பிடத்துக்கு முன் நின்று தமது எதிர்ப்புகளை வெளியிட்டனர்.


9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago