Sudharshini / 2016 பெப்ரவரி 18 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
மஹாவலி கங்கையில் கன்னொருவ பிரதேசத்தில் நீராடுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு சுற்றுலாப் பயணிகள் உட்பட அனைவருக்கும் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜகத் சந்திரசேகர பண்டார எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த இடத்தில், கடந்த 30 வருடங்களுக்குள் குறைந்தது 200க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் இவர்களில் முப்படை வீரர்கள், பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள் பலர் உள்ளடங்குகின்றனரெனவும் அவர் கூறினார்.
மஹாவலி கங்கையின் மிக ரம்மியான பிரதேசமாக, கன்னொருவ காணப்படுவதால் இவ்விடத்துக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாகவும் இவ்வாறு வருகை தருபவர்கள், இப்பகுதியில் நீராடச் சென்று நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பங்கள் அதிகரித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
'இந்த இடம் நீராடுவதங்கு பொருத்தமற்றது. வெளிப்பிரதேங்களில் இருந்து வருபவர்கள், கங்கையின் ஆழத்தை அறியாது நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர். இவ்வாறானவர்களின் நலன்கருதியே இப்பகுதியில் அறிவித்தல் பலகையொன்றும் வைக்கப்பட்டுள்ளது.
இப்பலகையானது சிதைவடைந்த நிலையில் காணப்படுவதால் இங்கு வருபவர்கள் அதனை கவனத்தில் கொள்வதில்லை' எனவும் அவர் கூறினார்.
6 hours ago
9 hours ago
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
10 Apr 2026