2026 ஜனவரி 21, புதன்கிழமை

’மாணவர்களின் பாதுகாப்புக்கு கேள்விகுறி’

Niroshini   / 2021 ஏப்ரல் 27 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மகேஷ் கீர்த்திரத்ன

மத்திய மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும், குறிப்பிடத்தக்களவில் பாடசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பில் கேள்வி எழுந்துள்ளதாக, இலங்கை ஆசிரியர் சேவை ஒன்றியத்தின் மத்திய மாகாண செயலாளர் கமகெதர திசாநாயக்க தெரிவித்தார்.

மாத்தளையில், இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போ​தே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், சுகாதார பரிந்துரைகளின்படி, பிற விழாக்களை, நிகழ்வுகளை நடத்துவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் ஆனால், பாடசாலைக்கு வரும் மாணவர்கள் தொகை 50 சதவீதவீதமாக வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

முதலாவது கொரோனா அலையின் போது, , மாணவர்களின் பாதுகாப்புக்காக பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன எனத் தெரிவித்த அவர், ஆனால், தற்போதைய கொரோனா பரவல் நிலைமையில், அதனை சரியாக முன்னெடுப்பதில் சிக்கல் இருப்பதாகவும் கூறினார்.

பாடசாலைகள் தொடர்ந்து மூடப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக கூறிய அவர், வகுப்பறைகளின் எண்ணிக்கையை அதிகரித்து, மாணவர்களுக்கிடையிலான இடைவௌியை அதிகரித்து, கற்றல் சடவ​டிக்கையை முன்னெடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

தறபோதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு? பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பக்கூடாது என்று கடுமையான கட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளனர் எனவும், அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X