Gavitha / 2021 பெப்ரவரி 28 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான்
நுவரெலியா கல்வி வலயத்துக்குட்ட சில பாடசாலைகளில், தற்போது புதிய மாணவர்களை உள்வாங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், பெற்றோர்களிடம் இருந்து அதிகளவு பணம் கோரப்படுவதாக, பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.
ஒரு மாணவியிடம் இருந்து 2,000 ரூபாய் தொடக்கம் 3,000 ரூபாய் வரையில் பணம் வசூல் செய்யப்படுவதாகவும் கதிரைகளுக்கு வர்ணப்பூச்சிகள், கோவைகள், அலுமாரிகள் உள்ளிட்ட பல பொருள்களைக் கட்டாயப்படுத்தி வாங்கித் தருமாறு கோருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், சில பாடசாலைகளில், இவ்வாறான பொருள்களை வாங்கிக்கொடுத்தால் மாத்திரமே மாணவர்கள் உள்வாங்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுவதாகவும் எனினும் பணம் பெறுவதற்கான ரசீதுகள் வழங்கப்படுவதில்லை என்றும் பெற்றொர் தெரிவித்துள்ளனர்.
பெருந்தோட்டங்களில் பணிபுரியும் பெற்றோர்கள், மிகுந்த சிரமத்துக்கு மத்தியிலேயே வருமானத்தை ஈட்டி வரும் நிலையில், தங்கள் பிள்ளைகளின் கல்வி விடயத்தில் பணம் செலுத்துமாறு கூறுவது நியாயமற்றது என்றும் எனவே, அதிகாரிகள் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பெற்றொர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
23 minute ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
21 Jan 2026
21 Jan 2026