2026 ஜனவரி 21, புதன்கிழமை

மாரடைப்பினாலேயே பொலிஸ் அதிகாரி மரணம்

Kogilavani   / 2021 மே 11 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தின் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றி வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (09) மரணமடைந்த 24 வயதுடைய பொலிஸ் அதிகாரி, மாரடைப்புக் காரணமாகவே மரணமடைந்துள்ளார் என்று, பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

மேற்படிப் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிவந்த பதுளை, லுணுகலை ஒப்டன் தோட்டத்தைச் சேர்ந்த இராமசாமி இராகவன் என்ற பொலிஸ் அதிகாரி, திடீர் சுகவீனம் காரணமாக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

பிரேதப் பரிசோதனை அறிக்கையில், மாரடைப்புக் காரணமாகவே அவர் மரணமடைந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஓப்டன் தோட்டத்திலுள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, ஒப்டன் தோட்டப் பொதுமயானத்தில், அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டதாக, மஸ்கெலிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யசரத்ன பண்டார தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X