Editorial / 2019 பெப்ரவரி 12 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மஸ்கெலியா, அதனை அண்மித்தப் பிரதேசங்களில், கடந்த மூன்று தினங்களாக அடிக்கடி மின்சாரத் தடை ஏற்பட்டு வருவதாகவும் இதனால் பாவனையாளர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
மாலை வேளைகளிலேயே மின்சாரம் தடைப்படுவதாகவும் இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டு மீண்டும் சீராகும்போது, அதிகளவு சக்தியுடன் மின்சாரம் பாய்வதால், மின்னியல் உபகரணங்கள் பழுதடைகின்றன என்றும், இதனால் தாம் பாரியப் பாதிப்பை எதிர்கொள்வதாகவும் மின் பாவனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சிவனொளிபாத மலைக்கு வருகைத் தரும் யாத்திரிகர்களும் பாரியப் பாதிப்புகளை எதிர்கொள்வர் என்பதால், சீரான மின்சாரத்தை வழங்குவதற்கு, மின்சார சபை அதிகாரிகள் முன்வர வேண்டுமென்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில், மஸ்கெலியா மின்சார பாவனையாளர் மத்திய நிலையத்த்தின் அதிகாரி ஆர்.தனுஷ்க கருத்துத் தெரிவிக்கையில், மலையகத்தில் கடந்த மூன்று தினங்களாக, மாலை வேளைகளில் பலத்தக் காற்றுடன்கூடிய மழை பெய்து வருவதாகவும் இதனால் மரங்களின் கிளைகல் மின்கம்பிகளில் மோதுவதால் மின்சாரம் தடைப்படுவதாகவும் தெரிவித்தார்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago