Freelancer / 2023 செப்டெம்பர் 03 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான்
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுர பகுதியில் விவசாய காணியில் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்குண்டு ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகி உள்ளார்.
இச்சம்பவம் இன்று அதிகாலை நிகழ்ந்துள்ளது. இவ்வாறு இறந்தவர் பிள்ளைகளின் தந்தையான45 வயதுடைய மைக்கல் எக்லஸ் என தெரிய வந்துள்ளது.
தனது விவசாய தோட்டத்திற்கு மரக்கறி வகைகளுக்கு நீர் பாய்ச்சுவதற்காக போடப்பட்டிருந்த மின்சார கம்பியினை அப்புறப்படுத்த முயற்சி செய்தபோது மின்சாரம் தாக்கி பலியாகி உள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணையை பொலிஸார் முன்னெடுத்து வருவதோடு, சடலத்தினை பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. R
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago