2026 ஜனவரி 21, புதன்கிழமை

மின்சார சபை ஊழியர்களை தாக்கிய மூவர் கைது

Kogilavani   / 2021 ஏப்ரல் 21 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேன் செனவிரத்ன

கண்டி, பஹ்ரவகந்த பிரதேசத்தில், மின்சார சபை ஊழியர்களை தாக்கிய  மூவரை, கண்டி பொலிஸார் இன்று (21) கைதுசெய்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன், மருமகன் உறவுமுறையுடைய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி பிரதேசத்தில், வீதியிலிருந்த மின்சாரத் தூணொன்று அருகிலிருந்த வீட்டின் மீது விழுந்ததில் வீடு சேதமடைந்துள்ளது.

இந்நிலையில் மின்சாரத் தூணை அப்புறப்படுத்துவதற்காக, மின்சார சபையின் ஊழியர்கள் உள்ளடங்களாக மூவர் அவ்விடத்துக்கு நேற்று  (20) சென்றுள்ளனர்.

இதன்போது பிரதேசவாசிகள் சிலர் மின்சார சபை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன் பாதுகாப்பற்ற முறையில் மின்சாரத் தூண் அமைக்கப்பட்டதாலேயே, வீடு சேதமடைந்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த மின்சாரசபை ஊழியர்கள் உள்ளடங்களாக மூவர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து தாக்குதலை நடத்தியவர்கள் பிரதேசத்திலிருந்து தப்பிச்சென்றிருந்த நிலையிலேயே பொலிஸார் அவர்களை கைதுசெய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X