Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஓகஸ்ட் 13 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்குச் செல்லும் பிரதான வீதியில், இரவு வேளைகளில் மின் விளக்குகள் ஒளிராமையால், வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்களும் உதவியாளர்களும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த நிலை நீடித்து வருகின்றதென, வைத்தியசாலை நிர்வாகம் தெரிவிக்கிறது.
இரவு வேளைகளில், வைத்தியசாலைக்கு அழைத்துவரப்படும் நோயாளர்கள், மற்றும் உதவியாளர்கள், வைத்தியசாலையில் கடமையிலிருப்போர், பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் என, நிர்வாகம் குறிப்பிடுகிறது.
இரவு வேளைகளில், காட்டு விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், உயிர் அச்சுறுத்தலுடனேயே, வைத்தியசாலையின் வீதியைக் கடந்துச் செல்ல வேண்டியுள்ளதாக, பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
9 minute ago
15 minute ago
16 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
15 minute ago
16 minute ago