Kogilavani / 2021 மே 12 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவி
கம்பளை மில்லகாமுல - கித்துல்வத்த பிரதேசத்தில், மின்சார வேலியில் சிக்குண்டு இரண்டு பிள்ளைகளின் தந்தை (வயது 42) ஒருவர் பரிதாபகரமாக இன்று(12) உயிரிழந்துள்ளார்.
குறித்தத் தோட்டத்திலுள்ள பாக்குமரமொன்றில் பாக்குகளைப் பறிப்பதற்காகச் சென்றபோதே, அவர் மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக, சட்டவிரோத மின்சார வேலி போடப்பட்டிருந்ததாக, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
பிரேதப் பரிசோதனைக்காக, கம்பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

21 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
2 hours ago
2 hours ago