2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

முடக்கப்பட்டிருந்த டிக்கோயா தரவல தோட்டம் விடுவிக்கப்பட்டது

Editorial   / 2020 ஏப்ரல் 09 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டன்-டிக்கோயா தரவல தோட்டம் கீழ்ப் பிரிவு,  தரவல ஆகிய பகுதிகளில், 14 நாள்களுக்கு சுயத்தனிமைக்கு உட்படுத்தப்பட்டிருந்த 200 பேரும், 14 நாள்கள் முடிவுற்றத் தருவாயில், சுயத்தனிமைப்படுத்தலிலிருந்து, இன்று(9) விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படித் தோட்டத்திலுள்ள மதபோதகரின் குடும்பம், யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் நடைபெற்ற சுவிஸ் போதகரின் போதனையில் பங்குபற்றியுள்ளனர்.

இது தொடர்பில், அம்பகமுவ பிரதேச பொதுசுகாதார பரிசோதர்களுக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, மேற்படி போதகரின் குடும்பமும் போதகரின் வீட்டுக்கு மதபோதனைக்காக வரும் அந்தத் தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 200 பேரும், 14 நாள்கள் சுயத்தனிமைக்கு உட்படுத்தப்பட்டனர்.

மேற்படித் தோட்டம், கடந்த 14 நாள்களாக முற்றாக முடக்கப்பட்டிருந்ததுடன், பொலிஸ் பாதுகப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .