Kogilavani / 2021 பெப்ரவரி 24 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
பதுளை மாவட்டத்தில், அதிகஷ்ட வலயத்துக்குள் 98 பாடசாலைகள் காணப்படுகின்ற நிலையில், அவற்றில் 50க்கும் குறைவான மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட 43 பாடசாலைகள் இயங்கி வருகின்றன என்றும் இந்தப் பாடசாலைகளை மூடும்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஊவா மாகாணக் கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதிகஷ்டப் பிரதேச மாணவர்களும் போக்குவரத்து வசதியற்ற மாணவர்களும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மாணவர்களும், நகர்புற பாடசாலைகளுக்குச் செல்ல முடியாத மாணவர்களுமே இந்தப் பாடசாலைகளில் கல்வி கற்றுவருகின்றனர் என்று ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேற்படிப் பாடசாலைகள், எவ்வித அடிப்படை வசதிகளுமி ன்றி, போதிய ஆசிரியர் வளங்களின்றியே இயங்கிவருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்தப் பாடசாலைகளை மூடும் எண்ணமில்லை என்றும் பாடசாலைகள் மூடப்பட்டால், மேற்படி மாணவர்கள கல்வியை இழக்கும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படுவர் என்றும் மாகாணக் கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாடசாலைகளை அபிவிருத்;திச் செய்வதுடன் ஆசிரியர் வளங்களைப் பெற்றுக்கொடுத்து, மாணவர்களுக்கு போதிய கல்வி அறிவை ஊட்டுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், மேற்படிப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களை, உயர்தர வகுப்புகளுக்காக தேசிய பாடசாலைகளில் இணைத்துவிட வேண்டியதும் அவசியம் என்று வலியுறுத்தியுள்ள அதிகாரிகள், இல்லையெனில் ஆரம்பப்பிரிவு அறிவுடன் அந்த மாணவர்கள், கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்திக்கொள்ளும் துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேற்படி 43 பாடசாலைகளின் கல்வி நிலைமை தொடர்பில் கல்வி அமைச்சின் கவனத்துக்குக் கொண்டுச்செல்லவுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், கல்வி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
21 minute ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
21 Jan 2026
21 Jan 2026