R.Maheshwary / 2021 செப்டெம்பர் 30 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமணசிறி குணதிலக
மொனராகலை பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் பிரிவில் நாளாந்தம் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் துசித அத்தனாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர், நாளாந்தம் 300- 500 தொற்றாளர்கள் வரை அடையாளம் காணப்பட்ட நிலையில், மரணங்களும் நாளொன்றுக்கு மூன்றாக பதிவாகிவந்தன.
எனினும் கடந்த வாரம் மொனராகலை சுகாதாரப் பிரிவில் 50-75 வரையான தொற்றாளர்களே அடையாளம் காணப்பட்டதுடன், ஒரு மரணம் மாத்திரமே பதிவாகியுள்ளது.
இதுவரை மொனராகலை மாவட்டத்தில் 18,735 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .