2026 ஜனவரி 21, புதன்கிழமை

மோட்டார் சைக்கிள் போட்டி: 4 இளைஞர்கள் கைது

Niroshini   / 2021 மே 02 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஏ.எம்.பாயிஸ்

அரநாயக்க - தெபத்கம பிரதேசத்தில், கொரோனா தொற்று நெருக்கடி மத்தியில் ஏற்பாடு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டப்போட்டியில்  கலந்துகொள்வதற்காக வருகை தந்திருந்த 4 இளைஞர்கள், நேற்று (01)  கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேஸ்புக் நட்பு குழுக்கள் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தி, இந்த மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டியை ஏற்பாடு செய்திருந்ததாக ஆரம்பக்கப்பட்ட விசார​ணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, ஸ்தலத்துக்கு பொலிஸார் விரைந்துள்ளனர். பொலிஸார வருகை தருவதை அவதானித்த அங்கிருந்த பெரும்பாலான இளைஞர்கள், அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து, அங்கிருந்த 4 இளைஞர் மாத்திரம் கைதுசெய்யப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X