Sudharshini / 2016 மார்ச் 06 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
வெலிமடை, நுவரெலியா வீதியின் இரண்டாம் மைல் கல்லுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த மின்கம்பங்களை திருடிச்சென்ற 10 இராணுவ வீரர்களை, செவ்வாய்க்கிழமை (08) வரை விளக்கமறியலில் வைக்குமாறு, வெலிமடை நீதவான் நீதிமன்ற நீதவான் சிந்தக்க ஸ்ரீநாத் குணசேகர உத்தரவிட்டார்.
வெலிமடை, நுவரெலியா வீதியின் இரண்டாம் மைல் கல்லுக்கு அருகில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மின்சாரக்கம்பங்களில் 6 காணாமல் போயிருப்பதாக, கடந்த 22ஆம் திகதி வெலிமடைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
வெலிமடை மின்சார சபை செய்த முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிஸார், மறைத்து வைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட 6 மின்சார கம்பங்களை கண்டெடுத்ததுடன் இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் 10 இராணுவ வீரர்களையும் சனிக்கிழமை (05) கைதுசெய்தனர்.
மேற்படி இராணுவ வீரர்களை, நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்த போதே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார். மேலும், மின்கம்பங்களை கொண்டுச் செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட லொறியை கைப்பற்ற பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago