Sudharshini / 2016 மார்ச் 16 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
'ஒன்றிணைவோம் பெண்களின் உரிமையை வென்றெடுப்போம்' என்ற தொனிப்பொருளில், மலையக மக்கள் முன்னணியின் மகளிர் தின விழா, ஹட்டன் கிருஸ்ணபவான் மண்டபத்தில் எதிர்வரும் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
ம.ம.மு போசகரும் மகளிர் அணித் தலைவியுமான சாந்தினிதேவி சந்திரசேகரன் தலைமையில் இடம்பெறவுள்ள இம்மகளிர் தின விழாவில், வறுமைக்கோட்டின் கீழுள்ள குடும்பங்களில் தரம் ஒன்றில் கல்விப் பயிலும் 100 மாணவிகளுக்கு, இலவச வங்கிக் கணக்குப் புத்தகம் வழங்கி வைக்கப்படவுள்ளது.
மேலும், இலவச வைத்திய முகாம் மற்றும் மூக்கு கண்ணாடி வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதென மலையக மகளிர் முன்னணியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்வில், பிரதம அதிதியாக இராஜங்க கல்வி அமைச்சரும் மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணியின் தலைவருமான வீ. இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினரும் நிதிச் செயலாளருமான அ.அரவிந்குமார், மாகாணசபை உறுப்பினர் ஆர்.இராஜாராம், முன்னணியின் செயலாளர் நாயகம் அந்தனி லோறன்ஸ் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர். மேலும், மலையக பாரம்பரிய கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
10 minute ago
45 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
45 minute ago
56 minute ago
1 hours ago