2026 ஜனவரி 21, புதன்கிழமை

“ரூ.1,000இல் எவ்விதப் பிரயோசனமும் இல்லை”

Kogilavani   / 2021 மே 03 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

1000 ரூபாய் சம்பள அதிகரிப்பில் எவ்விதப் பிரயோசனமும் இல்லை என்று தெரிவித்துள்ள பொகவந்தலாவை தோட்டத் தொழிலாளர்கள், 1,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டதிலிருந்து, மேலதிகக் கொடுப்பனவு வழங்கப்படுவதில்லை என்றும் வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து,  ஹட்டன் பிரதான வீதியின் மருங்கிலும் நின்று, இன்று (3) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தோட்ட அதிகாரியின் ஏதேச்சதிகார போக்கைக் கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தேனீருக்கு 5 நிமிடத்தை எடுத்தாலும்கூட தோட்ட நிர்வாகம் தம்மை கடுமையாகக் கடிந்துக்கொள்வதாக தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கிழமையில் மூன்று நாள் வேலை தருவதாகக் கூறி இரண்டு நாட்களே வேலை வழங்கப்படுவதாகவும் இது தொடர்பில் தட்டிக்கேட்ட இளைஞர்களும் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டனர் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.  

”தோட்ட நிர்வாகமானது, 20 கிலோகிராம் கொழுந்தைப் பறிக்குமாறு கேட்கின்றது. தற்போதைய நிலையில் 20 கிலோகிராம் கொழுந்துப் பறிப்பதென்பது இயலாத காரியம். கடந்த மாதம் 13 நாள்கள் வேலைக்கூட  கிடைக்கவில்லை. ஆயிரம் ரூபாய் கொடுத்ததில் எவ்விதப் பிரயோசனமும் இல்லை. 1,000 ரூபா வழங்கப்பட்டதில் இருந்து 20 கிலோவை எடுத்தால் மாத்திரமே பெயர் என தோட்ட நிர்வாகம் கூறுகின்றது. கிழமையில் 3 நாள் வேலை மாத்திரமே வழங்கப்படுகின்றது. எனவே இந்த முகாமையாளர் தேவையில்லை”  என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X