Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 செப்டெம்பர் 01 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
மலையகத்தில் பெய்து வரும் கடும் மழையினால் விமலசுரேந்திர நீர்த்தேக்கம் வான் பாய்வதுடன் , லக்ஷபான நீர்த்தேக்கத்தில் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
மலையகத்தின் மேற்கு சரிவுகளில் நேற்று (31) தொடக்கம் பெய்து வரும் இடைவிடாத மழையால் சில நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் திரு.ரஞ்சித் அழககோன் தெரிவித்துள்ளார்.
விமலசுரேந்திர நீர்த்தேக்கம் நிரம்ப ஆரம்பித்துள்ளதாகவும் , அதற்கு கீழே உள்ள லக்ஷபான நீர்த்தேக்கத்தில் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.
தற்போது பெய்து வரும் மழையுடன் காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் நிரம்பி வழிவதாகவும் இதனால், கெனியன், லக்ஷபான, நியூ லக்ஷபான, பொல்பிட்டிய, விமலசுரேந்திர நீர் மின் உற்பத்தி நிலையங்களில் மின்சார உற்பத்தியானது அதிகபட்ச திறனுடன் இடம்பெற்று வருகதாக குறித்த நீர்த்தேக்கங்களுக்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மழையினால் மண்சரிவு அபாயம் உள்ளதால், ஹட்டன்- கொழும்பு, ஹட்டன்- நுவரெலியா, நுவரெலியா- கம்பளை ஆகிய பிரதான வீதிகளில் வாகனங்களை செலுத்தும் சாரதிகள் அவதானமாக இருக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
9 minute ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
3 hours ago
7 hours ago