Editorial / 2023 மார்ச் 28 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

லொறி ஒன்றின் பின் டயருக்குள் மோட்டார் சைக்கிள் சிக்கி விபத்துக்கு உள்ளானதில், மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்ற 30 வயதான குமார அல்விஸ் உயிரிழந்துள்ளார் என வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இருந்து ஹட்டன் வரையிலும் பயணித்த லொறியும், ஹட்டனில் இருந்து கினிகத்ஹேன வரையிலும் பயணித்த மோட்டார் சைக்கிளுமே இவ்வாறு இன்று (28) பிற்பகல் 3.30 மணியளவில் விபத்துக்கு உள்ளாகியுள்ளன.
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை தியகல பிரதேசத்திலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
கடுமையான மழை பெய்துகொண்டிருக்கும் நிலையில், லொறிக்குப் பின்னால் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வழுக்கிச் சென்று, லொறியின் பின் டயருக்குள் சிக்கிக்கொண்டுள்ளது என விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என்றும் வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
(ரஞ்சித் ராஜபக்ஷ, யோகேசன்)
11 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago