Editorial / 2020 ஏப்ரல் 09 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
நுவரெலியாவில் வருடாந்தம் ஏப்ரல் மாதம் நடைபெறும் வசந்தகால கொண்டாட்டத்தை, இம்முறை ஓகஸ்ட் மாதத்தில் அல்லது அதற்கு பின்னரான காலப்பகுதியில் நடத்துவது தொடர்பில் பரீசிலிக்கப்பட்டு வருகின்றது என்று நுவரெலியா மாநகரசபை மேயர் சந்தன லால் கருணாதிலக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் இன்று (09) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
2020 ஆம் ஆண்டுக்குரிய வசந்தகால நிகழ்வுகளை நடத்துவதற்கு, 2019 டிசெம்பர் மாதம் முதலே மாநகரசபை தயாராகி வந்தது என்றும் எனினும், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையைக் கருத்திற்கொண்டு அதைத் தற்காலிகமாக ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது என்றும் கூறினார்.
தற்போது சுகாதாரம் சார்ந்த விடயங்களுக்கே முன்னுரிமை வழங்கிவருகின்றோம் என்றும் குறைந்தவருமானம் பெரும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருள்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.
தற்போதைய சூழ்நிலையில் நுவரெலியா நகரில் பாரியளவில் ஹோட்டல்களை நடத்துபவர்கள் உட்பட சிறு வியாபாரிகள் முதல் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறிய அவர், இவர்களை நாம் பாதுகாக்க வேண்டும் என்றும் அதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
2 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
9 hours ago