Freelancer / 2022 ஏப்ரல் 02 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.சந்ரு
நுவரெலியா மாநகர சபையின் ஏற்பாட்டில் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் ஏப்ரல் வசந்த கால கொண்டாட்டங்கள் இம் முறையும் நேற்று ஆரம்பமானது.
இந்த நிலையில், நுவரெலியா பஸ் தரிப்பிடம் முன்பாக போராட்டம் ஒன்றில் ஈடுபட்ட குழுவினர் வசந்த கால ஆரம்ப நிகழ்வில் இறங்கி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
நுவரெலியா தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள், நடத்துனர்கள் காலை 8.00 மணி முதல் பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாக வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈட்டுப்பட்டனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களுக்கு எரிபொருள் வழங்கப்படுகின்றது. தனியார் பஸ்களுக்கான எரிபொருள் வழங்கவில்லை என இவ் ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
அதனையடுத்து அவர்கள் நுவரெலியா காமினி தேசிய பாடசாலைக்கு முன் கிறகரி குளத்தில் வசந்த கால ஆரம்ப நிகழ்வாக பாடசாலை மாணவர்களின் பேண்ட் வாத்தியங்களுடன் இடம் பெற்ற நிகழ்வை இவர்கள் குழப்பநிலை செய்தனர்.
இதனால் இந் நிகழ்வு முற்றாக நிறுத்தப்பட்டது. இதனால் கிறகரி குளத்தின் அருகாமையில் பெரும் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து நுவரெலியா வெளிமடை பிரதான வீதியில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. (R)
1 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
18 Jan 2026