Editorial / 2023 ஜூலை 03 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ, சுதத் எச்.எம்.ஹேவா
வட்டவளை பிரதேசத்தில் பெய்துக்கொண்டிருக்கும் அடைமழை காரணமாக, ரொசெல்ல பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. இதனால், அவ்வீட்டின் அறையொன்றும் அதிலிருந்த வீட்டு உபகரணங்களும் சேதமடைந்துள்ளன.
இந்த சம்பவம், திங்கட்கிழமை (03) காலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டாலும் வீட்டிலிருந்த எவரும் பாதிக்கப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர். வீட்டின் அறைக்கும் பொருட்களுக்கும் ஏற்பட்ட சேதம் தொடர்பில் இதுவரை மதிப்பிடவில்லை.
மலையகத்தில் கடுமையான மழை பெய்து வருவதால், பிரதான வீதியோரங்களில் மண்மேடுகள் சரிந்து விழுகின்றன. ஆகையால், அவதானத்துடன் பயணிக்குமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மக்களிடமும் வாகன சாரதிகளிடமும் கேட்டுக்கொண்டுள்ளது.


9 minute ago
13 minute ago
26 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
13 minute ago
26 minute ago
9 hours ago