2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

வனராஜா தோட்டத்திலும் வெடித்து சிதறியது

R.Maheshwary   / 2021 டிசெம்பர் 08 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.சுந்தரலிங்கம் 


டிக்கோயா -வனராஜா தோட்டத்தில்  எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்து சிதறியுள்ளதாக ஹட்டன் பொலிஸார்  தெரிவித்தனர்.

குறித்த தோட்டத்திலுள்ள தொடர் குடியிருப்பு ஒன்றில் உள்ள வீடு ஒன்றில் இன்று (08) காலை 7.30 மணியளவில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.

 அடுப்புடன் இணைக்கும் குழாய் வெடித்து சிதறியதாக வீட்டு  உரிமையாளர்  தெரிவித்தார்.

இந்த வெடிப்பு சம்பவத்தில் எவருக்கும் பாதிப்புக்கள் எதுவும் ஏற்படாத போதிலும், அடுப்பு சேதமடைந்தாகவும் எரிவாயு கொள்கலனிலிருந்த எரிவாயு முழுமையாக கசிந்துள்ளதாகவும் வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.


சம்பவம் தொட்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X