2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

வனவிலங்குகளை பாதுகாக்குமாறு அறிவுறுத்தல்

Kogilavani   / 2016 பெப்ரவரி 14 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி, கன்னொருவ ஹல்ஒழுவ வீதி வழியாக பயணிக்கும் வாகனங்களில் மோதி, வன விலங்குகள் பல உயிரிழப்பதாகவும் இவ்வீதி வழியாக பயணிக்கும் வாகன சாரதிகள், வன விலங்குகள் தொடர்பில் அக்கறை செலுத்துமாறும் சுற்றாடலியலாளரான பிரதீப் சமரவிக்கிரம வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

'கன்னொருவ காட்டுப் பகுதியில் இருந்து இரவு வேளைகளில் மான்கள், சிறுத்தைகள், முள்ளம்பன்றிகள், பன்றிகள் உட்பட பல பாதுகாக்கப்பட வேண்டிய வனவிலங்குகள், நீர் தேடி மஹாவலி கங்கைக்கு வருகின்றன. அவை  பிரதான பாதையை கடந்தே கங்கைக்கு செல்கின்றன.   

இவை பாதையை கடக்கும்போது, அதிக வேகத்தில் பயணிக்கும் வாகனங்களில் மோதி  பரிதாபகரமாக உயிரிழக்கின்றன. சிலர் இறைச்சிக்காக விலங்குகளை வேண்டுமென்றே வாகனங்களில் மோதவைத்து கொல்லும் நிலையும் காணப்படுகின்றது.

விலங்குகளை பாதுகாப்பதற்காக இவ்விடத்தில் அறிவித்தல பலகை வைக்கப்பட்டுள்ள போதிலும், அதனை வாகன சாரதிகள் கவனத்தில் கொள்வதில்லை. எனவே, இப்பகுதியில் பயணிக்கும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அவர் கோரியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .