Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 டிசெம்பர் 01 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
உலக உணவு திட்டத்தின் கீழ், வலப்பனை பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேச மக்களுக்கு விநியோகிக்கப்படும் உலருணவு செயற்பாடுகளில் முறைக்கேடுகள் இடம் பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வலப்பனை பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வில் ஆளும் கட்சி , எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இது தொடர்பில் தமது அதிருப்தியை வெளியிட்டனர்.
வலப்பனை பிரதேசத்தின் தோட்டப்பகுதிகள் உள்ளிட்ட கிராம புறங்களில் வறுமையை எதிர் கொள்ளும் குடும்பங்களைச் தெரிவு செய்து, அக்குடும்பத்துக்கு 50 கிலோ கிராம் அரிசி, 20 கிலோ கிராம் பருப்பு மற்றும் 05 லீட்டர் சமையல் எண்ணெய் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் இது தொடர்பான குடும்ப விபரங்களை குறித்த அதிகாரிகள் சரியாகப் பெற்று, உலக உணவு திட்டம் வலப்பனை பிரதேசத்தில் முறையாக முன்னெடுக்கவில்லை. என்ற குற்றச்சாட்டை உறுப்பினர்கள் சபையில் முன்வைத்தனர்.
எனவே சபை தவிசாளர் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி, வலப்பனை பிரதேசத்தில் உலர் உணவுப் பொருள்களைப் பெற தகுதியானவர்களின் பெயர் விபரங்களை பிரதேச செயலாளரிடம் பெற்று, அதை மீள் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என யோசனையை முன்வைத்தனர்.
இந்த யோசனையை ஏற்றுக்கொண்ட சபை தவிசாளர், இதில் தவறுகள் இழைக்கப்பட்டிருந்தால் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுப்பினர்களுக்கு உறுதி வழங்கினார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago