Mayu / 2024 பெப்ரவரி 15 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.திவாகரன் டி.சந்ரு
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட் மேரி பகுதியில் மண்மேட்டிலிருந்து வழுக்கி விழுந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
தோட்டத்திற்கு சென்று மீண்டும் வீடு திரும்பும் போது சுமார் 530 உயரம் கொண்ட மண்மேட்டில் இருந்து புதன்கிழமை (15) வழுக்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 71 வயதுடைய வெள்ளசாமி கருப்பையா என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக இன்றைய தினம் (15) நுவரெலியா மாவட்ட பொது ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

20 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago
1 hours ago