Janu / 2025 பெப்ரவரி 10 , பி.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் - மஸ்கெலியா பிரதான வீதியில் உள்ள நோர்வூட் நியூ வேலி பகுதியில் முச்சக்கர வண்டியும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியின் சாரதி உட்பட பெண் ஒருவர் படுகாயமடைந்து டிக் ஓயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் திங்கட்கிழமை (10) மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஹட்டனில் இருந்து மஸ்கெலியா சாமிமலை நோக்கி அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டி, மஸ்கெலியாவில் இருந்து நுவரெலியா நோக்கி சென்ற லொறியுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டியின் அதிக வேகமே விபத்துக்கான காரணம் எனவும் விபத்தில் முச்சக்கர வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

7 minute ago
23 minute ago
34 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
23 minute ago
34 minute ago
2 hours ago