Editorial / 2019 ஜனவரி 17 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவங்ச
கொழும்பிலிருந்து லுணுகலை நோக்கிப் பயணித்த வானொன்று, இன்று (17) அதிகாலை 4.30 மணியளவில், லுணுகலை 24 மைல்கல் பகுதியில் வைத்து 50 அடி பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், ஒருவர் பலியாகியுள்ளதுடன் 10 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றுக்கு வந்துவிட்டு, பதுளை நோக்கிப் பயணித்தவர்களே, விபத்தை எதிர்கொண்டுள்ளனர். இவ்விபத்தில் எஸ்.சமரகோன் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார்.
காயமடைந்தவர்களில் மூன்று பெண்களும் ஏழு ஆண்களும் உள்ளடங்குவதாகவும் இவர்கள் லுணுகலை, பதுளை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். விபத்துக்கான காரணம் இதுவரைக் கண்டறியப்படவில்லை என்றும், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
5 minute ago
44 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
44 minute ago
56 minute ago
1 hours ago