2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

விபத்தின் பின்னர் மோதல் ; சித்தப்பா பலி

Janu   / 2025 மார்ச் 09 , பி.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சித்தப்பா மற்றும் மகன் பயணித்த இரு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக  ஏற்பட்ட தகராறில் 63 வயதுடையவர் உயிரிழந்துள்ள சம்பவம் வரகாபொல , அத்தனாவல பிரதேசத்தில் சனிக்கிழமை (08) இரவு இடம்பெற்றுள்ளது.  

விபத்தின் பின்னர் ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்து,  42 வயது மகன்,  63 வயதுடைய தனது சித்தப்பாவை தள்ளிவிட்டதில் அவர் கீழே விழுந்த நிலையில் அவரது தலை,  கீழே இருந்த கான்கிரீட்டில் மோதியுள்ளது. 

 அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர்  ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 

சம்பவ இடத்திற்கு வந்த வரகாபொல நீதவான் நீதிமன்றத்தின் நீதவான் லுஷாகா குமாரி தர்மகீர்த்தி,  விசாரணை நடத்தி, வரகாபொல ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள உடலை, பிரேத பரிசோதனைக்காக கேகாலை பொது மருத்துவமனையின் நீதித்துறை மருத்துவ அதிகாரியிடம் அனுப்பி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வரகாபொல பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 42 வயதுடைய  நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .