Editorial / 2019 ஜனவரி 18 , பி.ப. 12:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ
கினிகத்தேனை-நாவலப்பிட்டி பிரதான வீதி, நாவலப்பிட்டி பலந்தொட்ட பிரதேசத்தில், இன்று (18) காலை இடம்பெற்ற விபத்தில், ஒருவர் படுகாயமடைந்த நிலையில், நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாவலப்பிட்டியிலிருந்து பலங்தொட்ட பகுதிக்கு சென்ற ஓட்டோவும் அதே வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளும், ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே, படுகாயமடைந்துள்ளார்.
இரு வாகனங்களும் அதிக வேகத்துடன் பயணித்தமையே, இவ்விபத்துக்குக் காரணமென்று பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் ஓட்டோவும் பலத்த சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், விபத்துத் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
32 minute ago
36 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
36 minute ago
2 hours ago