R.Maheshwary / 2021 ஒக்டோபர் 06 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
பூண்டுலோயா பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த லொறி ஒன்று பேர்லண்ஸ் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று காலை (6) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், எதிரே வந்த வாகனத்துக்கு இடமளிக்கும் போது, வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்பட்டதனால் மேற்படி லொறி வழுக்கி சென்று விபத்துக்குள்ளாகியதாக லொறியின் சாரதி குறிப்பிட்டுள்ளார்.
லொறியில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும், அவர் பலத்த காயங்களுக்குள்ளாகி கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .