R.Maheshwary / 2022 டிசெம்பர் 06 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
அக்கரப்பத்தனை -டொரிங்டன் ஸ்டெயார் பிரிவில் உரம் ஏற்றி சென்ற டிரக்டர் வாகனம் விபத்துக்குள்ளானதில் மூன்று தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உரிய நட்ட ஈட்டை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளர் ராமன் கோபாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்த்ததுடன், மூவருக்கும் உரிய நட்ட ஈட்டை குறித்த தோட்ட கம்பனி வழங்குவததற்கான .நடவடிக்கையையும் எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எனவே விரைவில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நட்ட ஈட்டை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென ராமன் கோபாலகிருஸ்ணன் தெரிவித்தார்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago