Kogilavani / 2017 ஜூலை 07 , பி.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}


சிவாணி ஸ்ரீ
95 ஆவது சர்வதேச கூட்டுறவு தினத்தையொட்டி கேகாலை மாவட்ட கூட்டுறவு சங்கத்தின் சேவையாளர்களுக்கிடையில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்ற கிராமிய கூட்டுறவு சங்க சேவையாளர்களுக்கு, விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு, கேகாலை நகர சபை மண்டபத்தில், புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், போட்டிகளில் வெற்றிபெற்ற கிராமிய கூட்டுறவு சங்க சேவையாளர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்வில், சப்ரகமுவ மாகாண கூட்டுறவு சங்கத்தின் ஆணையாளர் பி.எம்.பி.என்.பெலிகம்மன்ன மற்றும் கேகாலை மாவட்ட கூட்டுறவு சங்கத்தின் பணிப்பாளர்கள், தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
8 minute ago
19 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
19 minute ago
20 minute ago