Kogilavani / 2021 மே 04 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
காஞ்சனகுமார ஆரியதாச
தம்புள்ளையில் கொரோனா வைரஸ் பரவல் தீவிர நிலையை அடைந்துள்ளதாக, தம்புள்ளை பிரதேசத்துக்குப் பொறுப்பான பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
தம்புள்ளை மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட 60 பேர் அவர்களது வீடுகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் ஏற்பட்டுள்ள இடநெருக்கடியே இதற்குக் காரணம் என்றும் நகரசபை பொதுசுகாதார பிரிவின் பரிசோதகர் பிரியந்த டி சில்வா தெரிவித்தார்.
தம்புள்ளை நகரில் மிகவும் அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்த தம்புள்ளை நகரசபையின் தலைவர் ஜாலிய ஓபாத, நகரிலுள்ள சில்லறை விற்பனை நிலையங்களில் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக நகரில் பல வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
தம்புள்ளை பொருளாதார மத்தியச் சந்தையை திறக்கும்போது அதற்கேற்ற பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
எனினும் கொரோனா வைரஸ் பரவல் நிலையைத் தடுப்பதற்கு, பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என்றும் தெரிவித்தார்.
දා ආරක්ෂාව යොදවා ඇත .
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago