R.Tharaniya / 2025 மே 29 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொகவந்தலாவ டியன்சின் தோட்டப் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் வியாழக்கிழமை (29) மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்
குறித்த நபர் தனது வீட்டில் புதன்கிழமை (28) இரவு உறங்கிகொண்டிருந்த நிலையில் உயிரிழந்து காணப்பட்டதாகவும் அவரின் மூக்கு பகுதியில் இரத்தகரை கானப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் விசாரனைகளை ஆரம்பித்த பொகவந்தலாவ பொலிஸார் குறித்த மரணம் தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்து ஹட்டன் தடைவியல் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவலைக்கப்பட்டு விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் கொலைசெய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டார என பொலிஸார் பல கோணங்களில் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் பொகவந்தலாவ டியன்சின் தோட்டப்பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஜெயராஜ் என்பவரே உயிரழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
35 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago