2025 மே 15, வியாழக்கிழமை

வீட்டுக்குள் 2 துப்பாக்கிகளும் கஞ்சா செடிகளும் சிக்கின

Freelancer   / 2023 பெப்ரவரி 22 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவங்ச

 

பசறை, ஹிகுருகடுவ, மொரட்டுகமவில் உள்ள  உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் இரண்டு கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைத்த தகவலுக்கு அமைய, 20 ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின் போதே, துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.

 

கைது செய்யப்பட்ட 54 வயதானவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, 450 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டது. அத்துடன் வீட்டுத்தோட்டத்தில் வளர்க்கப்பட்ட 5 அடி உயரமான கஞ்சா செ​டிகள் ஐந்தும் கைப்பற்றப்பட்டன என பொலிஸார் தெரிவித்தனர்.

 

துப்பாக்கிகள், விலங்குகளை சட்டவிரோதமான முறையில் வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .